மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

பெரணமல்லூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-04-01 08:05 GMT

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் வருகிற 19-ந்தேதி 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெரணமல்லூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதில் பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று  கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர். துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.

ஊர்வலத்துக்கு பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா வரவேற்றார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் பெரணமல்லூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டார வள மையத்தில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் ஆசிரிய பயிற்றுனர்கள் செண்பகவல்லி, சரவணராஜ், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்கள் பச்சையம்மாள், ராஜகுமாரி, காமாட்சி, இயன்முறை மருத்துவர் அரசு ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் இசை அறிவு நன்றி கூறினார். 

Tags:    

Similar News