போளூரில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு

போளூரில் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது;

Update: 2021-06-27 07:41 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் உட்கோட்டம், ஜமுனாமரத்தூரில் தொன் போஸ்கோ மையத்தில் இன்று நடைபெற்ற குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டி,அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

உடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .S.ராஜாகாளிஸ்வரன், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் . D.V. கிரண் ஸ்ருதி,   மற்றும் போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருM.அறிவழகன் ஆகியோர்கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினாரகள். இறுதியாக ஜமுனாமரத்தூர் உதவி ஆய்வாளர் முருகன்  நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News