போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்

Update: 2022-02-10 06:14 GMT

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து உதவி இயக்குனர் ஊராட்சிகள் ஆய்வு செய்தார்

போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் , முன்னேற்றம் குறித்து திருவண்ணாமலை உதவி இயக்குனர் ஊராட்சிகள், லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.

போளூர் ஊராட்சி ஒன்றியம் திருச்சூர் ஊராட்சி படியம்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் 15வது நிதிக்குழு மாநில திட்ட பணிகள் மற்றும் பிரதம மந்திரி கிராம குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ,குடிநீர் ஆதாரம் மேம்பாட்டு பணிகள், பொது சுகாதாரம், அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள், வரிவசூல் மற்றும் கிராம ஊராட்சியின் வருவாய் மேம்படுவதற்கான உத்திகள் ஆகியன குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

தற்போதைய நிதி ஆண்டு 2021 - 22 முடிவுறும் 31.3.22 க்குள் அனைத்து பணிகளும் முடிவுறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் பணி மேற்பார்வையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News