அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-10-06 01:18 GMT

பிரம்மோற்சவ விழாவில் எழுந்தருளிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியபுரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தை ஸ்ரீ தட்சண அகோபிலம் என்றும் அழைப்பர். திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா போன்று இந்த திருத்தலத்திலும் பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அதிகாலை மூலவா் சீனுவாசப் பெருமாளுக்கு,ஸ்ரீதேவி பூதேவி ,அரங்கநாதர் ,ஆண்டாள் நாச்சியார் ,ஆழ்வார்கள் ஆகிய சுவாமிகளுக்கு,  சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   

பின்னா், கோயிலில் உள்ள கொடி மரத்துக்கு பட்டாச்சாரியாா்களாா் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, உற்சவ மூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து லட்சுமி நரசிம்ம சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திராளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் அலங்கார ரூபத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி வீதி உலா நடைபெறும்.

இவ்விழாவின் முக்கிய விழாக்களான அக்டோபா் 8-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம்,   9-ஆம் தேதி ,இரவு கருட சேவை உற்சவம், 10-ஆம் தேதி தேரோட்டம், 12-ஆம் தேதி காலை தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகிறது.     விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், துணை ஆணையர் ஜோதிலட்சுமி,  ஆய்வாளர்கள் ராகவேந்தர்,  செயல் அலுவலர் சரண்யா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன்,  உறுப்பினர்கள் குமார், பூங்காவனம்  மாலதி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்கள்,  முக்கிய பிரமுகர்கள்,  கிராம பொதுமக்கள், இந்து சமய அறநிலையத்துறையினா்  செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News