சேத்துப்பட்டில் நடந்த கலைத் திருவிழா; 695 மாணவர்கள் பங்கேற்பு…!

சேத்துப்பட்டில் நடந்த கலைத் திருவிழாவில், 18 ஒன்றியங்களைச் சேர்ந்த 695 மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-11-25 11:05 GMT

- கலைத் திருவிழாவில் நடனம் ஆடிய மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில், 18 ஒன்றியங்களைச் சேர்ந்த 695 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கலை திருவிழா நடத்தி, இதில் கவின் கலை, நடனம், நாடகம், மொழித்திறன், கருவி இசை, இசை வாய்ப்பாட்டு, கிராமிய நடனம் என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசன் மூர்த்தி உத்தரவின்படியும், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் ஆலோசனைப்படியும் கலை திருவிழா பள்ளி அளவிலும் ஒன்றிய அளவிலும் சேத்துப்பட்டு தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,நடைபெற்றன.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 ஒன்றியங்களில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 695 பேர் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். கலை நிகழ்ச்சியில், சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை மனதை கொள்ளை கொண்ட “வாரான் வாரன் பூச்சாண்டிரயிலு வண்டியிலே” என்கிற பாடலுக்கு, பத்தியாபுரம் புனித வளவனார் பள்ளி மாணவர்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. கைதட்டியும் விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி மாணவர்கள், அடுத்தகட்டமாக, மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

Similar News