போளூர் அருகே கே.சி.வீரமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;
அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அடுத்த குருவிமலையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடந்து வருகிறது.