போளூரில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள் அறிவிப்பு

போளூரில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள் அறிவிக்கப்பட்டது.;

Update: 2022-02-11 07:53 GMT

போளூர் பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள் வேட்பாளர்களின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன . இந்த வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது.

பேரூராட்சியில் உள்ள 8 வாக்குச்சாவடி மையங்களில் 20 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எண்களை மாநில தேர்தல் ஆணையம் இணையதளம் மூலம் அறிவித்துள்ளது.

இந்த எண்களைப் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது, வேட்பாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில் வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News