போளூர் அருகே சாலை விபத்தில் அங்கன்வாடி பணியாளர் உயிரிழப்பு
போளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அங்கன்வாடி பணியாளர் உயிரிழந்தார்.
போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் இவருடைய மனைவி நவநீதம். இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் குன்னத்தூர் புறவழி சாலையில் காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது நவநீதம் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.