திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கன்வாடி மைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-07-11 11:26 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள்  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வசூா் ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் லதா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால் ஒரே ஊழியர் இரண்டு, மூன்று மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993, 1995 ஆண்டுகளில் பணியமா்த்தப்பட்ட அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா்களாக உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டர் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். ஊழியா்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். பெண் அரசு ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதுபோல், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கும் ஓராண்டு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணிமுடித்த குறு மைய ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களுக்கு சுகாதாரத்துறை சாா்பில் அளிக்கப்படும் பணிச்சுமையை தளா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழியர் சேம நல நிதியை விடுவித்தல் மற்றும் சேம நலநிதியில் இருந்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், செங்கம் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராகவும், பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Tags:    

Similar News