நாடகம் பார்க்க சென்ற அக்கா, தங்கை வீட்டில் நகைகள், ரூ.1.27 லட்சம் திருட்டு
சேத்துப்பட்டு அருகே அக்கா, தங்கை வீட்டில் 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.27 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சேத்துப்பட்டு அடுத்த ராமாபுரம் கிராமத்தில் அக்கா அக்கா தங்கை இருவரும் தங்களுடைய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு வேண்டா அவருடைய கணவர் குப்புசாமி , கலா அவருடைய மருமகன் காந்தி, மணிமேகலை ஆகிய அனைவரும் லாடபுரம் கிராமத்தில் நடந்த நாடகம் பார்க்க இரவு சென்றுவிட்டனர்.
இவர்கள் இருவரின் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோ பெட்டி உள்பட அனைத்தையும் கலைத்துப் போட்டு தேடிப்பார்த்துள்ளனர்.
இதில் கலா வீட்டில் 6 சவரன் செயின், அரை சவரன் கம்மல் மற்றும் வெள்ளி பொருட்கள் ரூபாய் 80,000 ஆகியவற்றையும், வேண்டா வீட்டில் உள்ளே புகுந்த திருடர்கள் பீரோ பெட்டியை ஆராய்ந்து பார்த்து விட்டு வீட்டிலுள்ள கிரைண்டரில் அடிபாகத்தில் சக்கரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 சவரன் செயின் கம்மல் மோதிரம் வெள்ளி கொலுசுகள் மற்றும் 47 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாடகம் முடிந்து காலையில் வீட்டில் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.