ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை ரூ.63.73 லட்சம் பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.;

Update: 2024-08-23 01:00 GMT

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.63.73 லட்சம், 434 கிராம் தங்கம், 436 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிகிழமை தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபடுவா்.

இந்த நிலையில், கோயில் வளாகத்தில் நிரந்தர உண்டியல்கள் 7, திருவிழாவுக்காக தற்காலிக உண்டியல்கள் 8 என 15 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன.

கோயில் வளாகத்தில் உதவி ஆணையா் ஜோதிலட்சுமி, செயல் அலுவலா் சங்கா், ஆய்வாளா் ராகவேந்தா் முன்னிலையில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரொக்கமாக ரூ.63 லட்சத்து 73 ஆயிரத்து 638 ரூபாயும், 434 கிராம் தங்கமும், 436 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.

ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இரவு உற்சவா் சிலைக்கு அபிஷேகம் செய்து மலா்களால் அலங்கரித்தனா். பின்னா், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

போளூர் அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ரேணுகாம்பாள், நவகிரகங்கள் ஆகியவை ஒருசேர அமைந்துள்ளன.

இக்கோவில் சிதலமடைந்து காணப்பட்டதால் பக்தர்கள் சார்பில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று காலை கோ பூஜை, திருமுறை பாராயணம் ,வேதபாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் என பல்வேறு பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ தேவி கருமாரியம்மன், ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ரேணுகாம்பாள் , நவகிரகங்கள் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவில் வடமாதிமங்கலம் ,கருங்காலி குப்பம் ,போளூர் , சந்தவாசல் என சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.  மேலும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.  நேற்று இரவு இன்னிசை நிகழ்ச்சி சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Similar News