போளூர் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
போளூர் அருகே பஸ் மீது கார்மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேத்துப்பட்டு அருகே பஸ் மீது கார்மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வடிவேல் . அதேப் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சங்கர் . மாணிக்கம் மகன் ஆனந்தன் , சின்ன தம்பி மகன் சிவராமன் , சேட்டு மகன் பிரகாஷ் .
இவர்கள் வசூர் கோயிலில் நடைபெறும் திருவிழாவிற்காக பட்டாசுகள் மற்றும் பொருட்களை வாங்கிக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்கள், சேத்துப்பட்டு அடுத்த கிழக்கு மேடு கூட்ரோடு அருகே நேற்று மாலை 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது போரூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்ஸும் இவர்களது காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன .
இதில் வடிவேல் , சங்கர் , ஆனந்தன் , சிவராமன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . பிரகாஷ் என்பவர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உடனடியாக போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு வீரர்கள் காரை உடைத்து உள்ளிருந்த நான்கு பேரில் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ்சுக்கு எதிரே இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அவர் காரும் பஸ்ஸும் நேர் திசையில் வருவதை பார்த்து விபத்து நடக்கப் போவதை அறிந்து கூச்சலிட்டு தனது இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டு இறங்கி ஓடினார் இதனால் இருசக்கர வாகனம் மட்டும் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார் . மேலும் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோயில் விழாவிற்கு பொருட்களை வாங்க சென்றவர்கள் விபத்தில் இறந்த செய்தியை கேட்டு வசூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.