மழையால் 3,700 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

போளூர் ஒன்றியத்தில் மழையால் 3,700 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Update: 2021-11-24 13:42 GMT

போளூர் ஒன்றியத்தில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்கள்

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சத்தியமூர்த்தி, உதவி வேளாண் இயக்குனர் குணசேகரன், வேளாண் அலுவலர் சதீஷ்குமார், துணை வேளாண் அலுவலர் ராமு மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் போளூர் ஒன்றியத்தில் உள்ள பெரியகரம், ரெண்டேரிப்பட்டு உள்பட பல கிராமங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வடகிழக்கு பருவமழையினால் நேற்று வரை 3,700 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளது என்றும், மேலும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News