போளூரிலிருந்து சென்னைக்கு 2 புதிய பேருந்து சேவை துவக்கம்
போளூரிலிருந்து சென்னைக்கு 2 புதிய பேருந்து சேவைகள் தொடங்கிவைக்கப்பட்டன;
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சென்னைக்கு 2 புதிய பேருந்து சேவை , தொடங்கிவைக்கப்பட்டன
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் போளூரிலிருந்து, சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால், போளூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், இதே வழித்தடத்தில் போளூ ரில் இரு ந்து சென்னைக்கு மீண்டும் பேருந்தை இயக்கவேண்டும் என திமுக அரசுக்கு மக்கள் கோரிக்கைவைத்திருந்தனர்.
இதனடிப்படையில் தடம் எண் 131-ல் போளூரிலிருந்து, சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு 2 புதிய பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன.
புதிய பேருந்துகளை ஆரணி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன், மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாண்டுரங்கன், சேகா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், திமுக நகரச் செயலா் தனசேகரன், சேத்துப்பட்டு ஒன்றியச் செயலா் மனோகரன், பணிமனை பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், துணைப் பொது மேலாளா் கலைச்செல்வன், தொமுச மாநில பேரவை துணைத் தலைவா் செளந்திரராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், ஓட்டுநா் அணிச் செயலா் அண்ணாமலை, நடத்துநா் அணிச் செயலா் சுதாகா் , போக்குவரத்து கழக அதிகாரிகள், போளூர் கிளை மேலாளர்கள் தொழில்நுட்ப செயலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் திமுக ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.