ஆசிரியர்களுக்கு பங்கு ஈவு தொகை: துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ஆசிரியர்களுக்கு பங்கு ஈவு தொகையை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நடைபெற்ற விழாவில் 264 ஆசிரியர்களுக்கு பங்கு ஈவு தொகையாக ரூபாய் 26 லட்சத்து 33 ஆயிரத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார். கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்