பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து 2 நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திருவண்ணாமலை பலத்த காற்று வீசியது. பின்னர் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கீழ்பெண்ணாத்தூரில் 43.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
மற்ற பகுதியில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: திருவண்ணாமலை- 15.2, ஜமுனாமரத்தூர்- 14, செய்யாறு- 11, செங்கம்- 8.8, சேத்துப்பட்டு- 7, போளூர்- 4.4, ஆரணி- 3.2. மழை அளவு பதிவாகி உள்ளது.