கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவிப்பு;

Update: 2021-09-20 13:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் மின்வாரிய கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கீழ்பெண்ணாத்தூர் மின் கோட்டம் துணை மின் நிலையத்தில், வரும் 21ஆம்  தேதி, அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்பெண்ணாத்தூர் நகரம்,  மற்றும் அதை சுற்றியுள்ள கருங்காலி குப்பம், சோமாசிபாடி, கல்பூண்டி, ராஜா தோப்பு, ஆரியமங்கலம், ஐங்குணம் கத்தாழம்பட்டு, நல்லான்பிள்ளை பெற்றான், ஆரஞ்சி, சோகாட்டுக் குளம், கழிக்குலம், காட்டு வேளானந்தல்  ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .

Tags:    

Similar News