பொது மக்களிடையே மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி
மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்;
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக பொது மக்களிடையே மஞ்சப்பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மஞ்சப்பை உபயோகிக்கும் நிகழ்வினை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், செயலாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார்.
தொடர்ந்து மஞ்சள் பை உபயோகிப்பதன் அவசியம் , நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர் விளக்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.