கீழ் பென்னாத்தூரில் சாராயம் கடத்திய 4பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையப் பகுதியில் சாராயம் கடத்திய 4பேர் கைது செய்யப்பட்டனர்;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையப் பகுதியில் போலீசார் நடத்திய தீவிர சாராய ஒழிப்பு பணியில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஷ்யாமளா தலைமையில் போலீசார் சனி ஞாயிறு கிழமைகளில் தீவிர சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது வேகமாக வந்த ஆட்டோவில் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த சதீஷ்குமார், சீனு, மலப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த பெருமாள், சேட்டு ஆகியோரிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் மதிப்பிலான சாராயத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.