தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய துணை சபாநாயகர்
வேட்டவலம் தாலுக்கா ஆவூர் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசுப்பொருட்களை துணை சபாநாயகர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் தாலுக்கா ஆவூர் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆவூர் ஒன்றிய தலைவர், மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆவூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.