பெண்கள் மல்லர் கம்பம் போட்டி: விருது வழங்கிய திருவண்ணாமலை ஆட்சியர்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் விருதுகள் வழங்கினார்

Update: 2023-03-20 14:56 GMT

பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் பதக்கங்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்பாக சர்வதேச மகளிர் தின விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் 17/3/2023 முதல் 18/3/2023 வரை அனைத்து வயது பெண்களுக்குமான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியோடு. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன் அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது

அப்போட்டிகளில் மல்லர் கம்பம் விளையாட்டும் இடம் பெற்றிருந்தது அதில் திருவண்ணாமலை மாவட்டம் மல்லர் கம்ப கழகத்தின் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பாக தனது விளையாட்டுத் திறனை நிரூபித்தனர் .

அதில் சிறப்பாக செய்து காட்டிய மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் அழைத்து தனது பாராட்டையும் பதக்கத்தையும் வழங்கி வாழ்த்தினார்

மேலும் திருவண்ணாமலை மாவட்ட மல்லர் கம்பக் கழகத்தின் தலைவர் ராஜா மோகன் தாஸ்(ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர்), செயலாளர் தங்கராஜ் (உடற்கல்வி ஆசிரியர்) ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 17.03.2023 மற்றும் 18.03.2023 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மகளிர்களுக்கு 20.03.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், பதக்கங்களை வழங்கினார்.

Tags:    

Similar News