ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-04-27 10:58 GMT

ஆரணி அருகே நடந்த மனு நீதி நாள்  முகாமில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் முன்பாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிப்காட்) நாராயணன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் எம்.பழனி, துணைத்தலைவர் புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் க.பெருமாள் வரவேற்றார். முகாமில் 82 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மேற்கு ஆரணி ஒன்றிய தி.மு.க. செயலாளர் தட்சிணாமூர்த்தி, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, வட்ட வழங்கல் அலுவலர் லலிதா உள்பட ஏராளமான அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் திருவேங்கடம் நன்றி கூறினார். 

தூசி அருகே உள்ள மேனலூர், பூனைதாங்கள், பல்லாவரம் மற்றும் கனிகிலுப்பை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மனுநீதி நாள் முகாம் மேனலூர் கிராமத்தில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் த.விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் 145 மனுக்கள் பெறப்பட்டு, 133 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உடனடியான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் காயத்ரி சுதர்சனம், வெம்பாக்கம் வட்டாட்சியர் சத்யன், வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News