திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தேமுதிக சார்பில் முன்னாள் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாகொண்டாட்டம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, பின்னர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அன்னதானத் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
முன்னதாக நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் புகழேந்தி ,ஆறுமுகம் ,செயற்குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தன், நகர செயலாளர்கள் சுந்தர்ராஜன், பாலாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் முத்து ,மோகன்ராஜ் ,மணிமாறன், சக்திவேல், மாசிலாமணி ,வேலு ,முனுசாமி ,சத்தியமூர்த்தி ,மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரன், கருணாகரன், காமராஜ் , மருத்துவர் பாலாஜி, மருத்துவமனை ஊழியர்கள், தேமுதிகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையம் அருகில் கேப்டன் விஜயகாந்த் திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர்த்துவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
செங்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாகொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது ஆண்டு பிறந்தநாளை யொட்டி நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அவரின் திருவுருவப்பட்டதிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலாளர் சங்கர், தலைமை கழகபேச்சாளர் பேராசிரியர் தீனாபிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு, சண்முகம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஆனந்த், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரபிக்பாஷா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னக்கிளி வெங்கடேஷ், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சிவா, வேங்கடகிருஷ்ணன், அவைத்தலைவர் பாலு, நகர பெருமாள் சாமி, துணை செயலாளர்கள் அன்பழகன், அசோக்ன், சுரேஷ், மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் நீலகண்டன், மாஸ்டர் சீனு உள்ளிட்ட கழக நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வேட்டவலம்
மறைந்த முன்னாள் கேப்டன் பிறந்தநாள் தினத்தை வேட்டவலம் அருகே கண்டாச்சிபுரத்தில் கொண்டாப்பட்டது. மறைந்த முன்னாள் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பத்மபூஷன் டாக்டர் கேப்டன் விஜயகாந்தின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி ஒன்றிய மகளிர் அணி சார்பில் கோலியனூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ரீனா தலைமையில் அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கேக்கு வெட்டி 100 மாணவர்களுக்கு நோட்டு ,பேனா ,பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.