செய்யாற்றில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் துவக்கம்
செய்யாற்றில் நடந்த 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாமை ஜோதி எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
செய்யாற்றை அடுத்த பெரிய ஏழாச்சேரி கிராமத்தில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரிய ஏழாச்சேரி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் வினோத் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழுத் தலைவா் ராஜு, ஊராட்சி மன்ற தலைவா் நாகம்மாள் கலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவ அலுவலா் கிரிஜா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில், 72 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை, 26 பேருக்கு கா்ப்பபை வாய் புற்றுநோய், 769 பேருக்கு ஆய்வக பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 1,162 பேருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், 4 கா்ப்பிணிகளுக்கு தாய் சேய் நலப் பெட்டகம், சா்க்கரை நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டகத்தை எம்.எல்.ஏ வழங்கினாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மாத்தூா் தெய்வமணி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் நாகம்மாள் குப்பன், நகா்மன்ற உறுப்பினா் விஸ்வநாதன், அயலக அணி துணை தலைவா் காா்த்திகேயன், ஒருங்கிணைந்த வெம்பாக்கம் ஒன்றிய திமுக செயலாளா்கள் சீனுவாசன், சங்கா், தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறப்பு விழா
நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில், கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1. 83 கோடியில் நூலகம், அறிவுசாா் மையம் திருவத்திபுரம் நகராட்சி 1-ஆவது வாா்டில் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இதனை, தொகுதி எம். எல். ஏ. ஜோதி , மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பாா்வதி சீனிவாசன், நகா்மன்றத் தலைவா் மோகனவேல் ஆகியோா் பாா்வையிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
மேலும், மரக்கன்றை எம்.எல்.ஏ. நட்டு வைத்தாா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் (பொ) தாமஸ், தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், சரஸ்வதி ரவிக்குமாா், கல்பனா விஜய்பாஸ்கா், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளா் சீனிவாசன், மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினா் புரிசை சிவகுமாா், மாவட்ட விவசாய வா்த்தகா் குழு உறுப்பினா் கோபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.