நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சிறப்பு பார்வை

திருவத்திபுரம் ( செய்யாறு) நகராட்சி ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.;

Update: 2022-01-28 08:09 GMT

திருவத்திபுரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டம், செய்யாறு நகரத்தில் 27 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். தற்போது மக்கள் இதனை செய்யாறு என்றும் அழைக்கின்றனர்.

செய்யாறு வருவாய் கோட்டத்தில் மாவட்டத் தலைநகர் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் அதற்கு இணையான இரண்டாம்நிலை அலுவலகங்கள் அனைத்தும் அமையப்பெற்றுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வருவாய் கோட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி இப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் ஓன்று உள்ளது. புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் இந்நகராட்சியில் அமைந்துள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள் மாவட்ட தலைமை மருத்துவமனை, துணை ஆட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, நூற்றாண்டு கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பள்ளி கல்வி மாவட்ட அலுவலகம், சுகாதார மாவட்ட அலுவலகம் ,பத்திர பதிவு மாவட்ட அலுவலகம்,மேலும் பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.

1993 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.

தற்போது நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில், இந்த நகராட்சி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வார்டுகள் 27

எஸ்சி வார்டு 21

எஸ்சி பெண்கள் வார்டு  எண்  6,10        

பெண்கள் பொதுப்பிரிவு வார்டுகள் 1, 2, 4, 7, 8, 9, 13, 15, 17, 20, 23, 24

மேலும் வாக்கு எண்ணிக்கை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலராக நகராட்சி ஆணையாளர் ரகுராமன், உதவி தேர்தல் அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராமலிங்கம், குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவத்திபுரம் நகரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் சிப்காட் நிறுவனம் அமைந்துள்ளது. 

சிப்காட் அமைந்துள்ள பகுதியை விரிவாக்கம் செய்து திருவத்திபுரம் நகராட்சி பகுதியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மேலும் நகராட்சிக்கு வருவாயும் அதிகரிக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News