செய்யாறு அருகே இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

செய்யாறு அருகே நேற்றிரவு இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.;

Update: 2021-08-08 06:02 GMT

விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் பைக்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன் லாரி ஓட்டுநர். இவர் அவனியாபுரம் கூட்ரோடு அருகே இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி செல்லப்பன் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே செல்லப்பன் உயிரிழந்தார். இது குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News