திருவண்ணாமலை மாவட்டத்தில் விரைவில் டைடல் பார்க்: தொழில்துறை அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் டைடல் பார்க் விரைவில் தொடங்கப்படும் என தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.;

Update: 2024-10-25 01:56 GMT

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  தலைமையில் நடைபெற்ற மகேந்திரா வாகன பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி ஆய்வக திறப்பு விழா

செய்யாறு சிப்காட்டில் மகேந்திரா வாகன நிறுவனம் சார்பில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி ஆய்வக திறப்பு விழா  நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா திருவண்ணாமலை மாவட்டத்தில் விரைவில் டைட்டில் பார்க் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் 454 ஏக்கர் பரப்பளவில் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2021ல் மகேந்திரா ஓடுதளம் அமைத்தது. பின்னர் கம்பெனி விரிவாக்கம் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி, சாலைகளில் செல்லும் கார்களின் பாதுகாப்பு குறித்த நவீன ஆய்வகம் திறப்பு விழா  சிப்காட் மகேந்திரா உள் வளாக அரங்கில் நடைபெற்றது.  

நிகழ்ச்சிக்கு மகேந்திரா அண்ட் மகேந்திரா வாகன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி வளர்ச்சி தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மகேந்திரா உள்வளாகத்தில் பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி, சாலைகளில் செல்லும் வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு குறித்த நவீன ஆய்வகம் திறந்து வைத்து பேசியதாவது,

தமிழ்நாட்டிற்கு தொழில் துறை முன்னேற்றத்தில் மற்ற மாநிலங்களுடன் போட்டி இல்லைநாடுகளுக்கு இடையே தான் போட்டி நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயேதமிழக பெண்கள்தான் ஆட்டோ மொபைல் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்று வேலை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 50 லட்சம் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் அதற்கான முன்னெடுப்புகளை தொழில்துறையானது முன்னெடுத்து மூன்றாண்டு காலத்தில் 31 லட்சம் இளைஞர்களுக்கும், மகளிர்க ளுக்கும் தொழில்துறையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

திருவண்ணாமலை மாவட்டத்தில் டைடல் பார்க் விரைவில் தொடங்கப்படும். செய்யாறு சிப்காட்டில் தொடங்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலைகளும் அந்தந்த பகுதியில் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முன்வர வேண்டும் என அமைச்சர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் நிர்வாக செயல் இயக்குனர் சினேகா சர்மா, செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள்,சிப்காட் நிர்வாக அலுவலர்கள், மகேந்திரா கம்பெனி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாகநவீன ஆய்வக மையத்தை மகேந்திரா வாகன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி வளர்ச்சி தலைவர் ஆர். வேலுச்சாமி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு தொழில்நுட்பங்களை ஒவ்வொரு ஆய்வுக்கூடமாக அழைத்துச் சென்று விளக்கி கூறினார். 

Tags:    

Similar News