செய்யாறு துணை வட்டாட்சியா் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு துணை வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்;
செய்யாறு துணை வட்டாட்சியா் பணியிடை நீக்கம்... திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே 11-ஆம் தேதி இளநீா்குன்றம் கிராமத்தைச் சோந்த திலகவதி, தன்னிடம் உள்ள நகைகளை வைத்துக் கொண்டு தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை வழங்குமாறு கோரிக்கை விடுத்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடா்பாக, மே 13-ஆம் தேதி மனுதாரா் திலகவதி, செய்யாறு வட்டாட்சியா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா், சாா் -ஆட்சியரின் நோமுக உதவியாளா், கண்காணிப்பாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஆகியோரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
இதன் அடிப்படையில், செய்யாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியா் த.டி.வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து சாா் -ஆட்சியா் அனாமிகா உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட திலகவதிக்கு அவரது தந்தை பரசுராமனின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆரணி...ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா். இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பளவு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை, ஆவண சரிபாா்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 54 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்று கொண்ட கோட்டாட்சியா் தனலட்சுமி, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
செய்யாறு சார்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சார்-ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும், முதியோா் உதவித்தொகை, பெயா் திருத்தம், பட்டா ரத்து, இலவச வீடு, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 68 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்களை பெற்று கொண்ட சார் ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.