திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் வேலு பேசினார்

Update: 2023-05-30 02:19 GMT

கருணாநிதி நூற்றாண்டு விழா வருடம் முழுவதும் கொண்டாடப்படும் என திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் வேலு பேசினார்

கருணாநிதி நூற்றாண்டு விழா வருடம் முழுவதும் கொண்டாடப்படும் என திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் வேலு பேசினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட கழக செயலாளர் தரணி வேந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.

அவர் பேசுகையில், ஓய்வில்லா சூரியன் தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர், ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் முக்கால் நூற்றாண்டு கால பங்களிப்பாளர், அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாடு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர், களம் கண்ட 13 தேர்தல்களில் வெற்றி கண்ட சாதனையாளர் ஐந்து முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலன் விளைவிக்கும் திட்டங்களை வழங்கியவர், இந்திய ஜனநாயக அரசியலில் மூத்த அரசியல் தலைவர், இலக்கியம் கவிதை நாடகம் திரைப்படம் என தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.

தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திருவண்ணாமலை மாவட்டத்தில் கழக கொடி ஏற்றுதல், இனிப்பு மற்றும் உணவு வழங்குதல், நல உதவிகளுடன் பொதுக்கூட்டம், மரம் நடுதல், மருத்துவ முகாம், ரத்த தானம் கருத்தரங்குகள் பட்டிமன்றம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் என பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் வருடம் முழுவதும் எழுச்சியாக கொண்டாடுவது என இந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை ஜூன் 3 முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது அதனை இந்த மாவட்ட கழகம் சார்பில் பாராட்டி வரவேற்று மகிழ்கிறோம்.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் வென்று சாதனை படைப்போம் என கூறினார்.

நிகழ்ச்சியில் திமுக மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், ஊராட்சி குழு தலைவர்கள், நகர செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News