செய்யாறு அருகே ஏரிக்கரையோரம் கிடந்த மாத்திரை மூட்டைகள்; அப்பகுதியில் பரபரப்பு
செய்யாறு அருகே ஏரிக்கரையோரம் மூட்டைகளில் கிடந்த மாத்திரைகளால் பரபரப்பு ஏற்பட்டது.;
செய்யாறு அருகே ஏரிக்கரையோரம் கொட்டப்பட்டுள்ள மாத்திரைகள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்ப்பாக்கம் ஏரிக்கரையோரம் காலையில் அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு நான்கு மூட்டைகள் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது மருத்துவமனைகளில் வழங்க வேண்டிய மருந்து, மாத்திரைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மருத்துவ குழுவினர், இந்த மாத்திரைகள் காலாவதியானது தான் என உறுதி செய்தனர்.
மேலும் இதனை எங்கிருந்து கொண்டு வந்து வீசினார்கள்? யார் வீசியவர்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்