செய்யூர் தொழிற் வழித்தட சாலையை அதிகாரி ஆய்வு

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்

Update: 2022-05-13 14:00 GMT

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்.

சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலம் செய்யூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைப்பு சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கே.செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை எவ்வாறு தரமாக போடப்பட்டுள்ளது என்று சோதனை செய்தார். மேலும் சிறு பாலங்கள் ரயில்வே கீழ் பாலங்கள் வடிகால் கால்வாய்கள் உள்ளிட்டவை பார்வையிட்டார்.மேலும் இச்சாலையில் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலைப் பணியை ஒப்பந்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டுமென்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News