செய்யாற்றில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-31 13:06 GMT

ஆர்ப்பாட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆலை கிளை தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், உதயகுமார், பாண்டுரங்கன், அப்துல் காதர், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில தலைவர் வேல்மாறன், மாநில துணை பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிரிட்ட கரும்பை பிழிந்து அதிலிருந்து உற்பத்தி செய்த ரூ.80 கோடி அளவிலான இணை மின்சாரத்தை வாங்கிக் கொண்டு பல ஆண்டுகளாக பணத்தை தராமல் அலைக்கழிக்கும் தமிழக அரசு துறையான டான்ஜட்கோ நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டுத் தரவும், பணம் கிடைக்காமல் அவதிப்படும் விவசாயின் துன்பத்தை தமிழக அரசு போக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து கோரிக்கை மனுவினை செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழங்கினர். முடிவில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு திட்ட ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனி, அன்பழகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பட வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News