வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு

முதல்-அமைச்சர் புத்தாய்வு திட்ட வல்லுநர்கள், வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-04 00:53 GMT

யூரியா கிடங்கை ஆய்வு செய்த அதிகாரிகள்.

தமிழக முதல்-அமைச்சர் புத்தாய்வு திட்ட வல்லுநர்கள் சண்முகப்பிரியா, சேதுராமன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

அவர்கள் திருவண்ணாமலை உழவர் சந்தையில் உட்கட்டமைப்பு வசதிகள், காய்கனி வரத்து, விவசாயிகள், நுகர்வோர் வருகை, தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வணிகத்திட்டம், சமையல் எண்ணெய் உற்பத்தி ,மணிலா மதிப்பு கூட்டு பொருள், மற்றும் சந்தைப்படுத்துதல், பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

செய்யாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் மணிலா மதிப்பு கூட்டு அழகு, சமையல் எண்ணெய் உற்பத்தி சந்தைப்படுத்துதல் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விதைகள் மற்றும் நடவு பொருட்கள் உப இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) செல்வராஜ், திருவண்ணாமலை விற்பனை குழு செயலாளர் சந்திரசேகரன், வேளாண்மை அலுவலர்கள் செந்தமிழ் செல்வன், எழிலரசு, காயத்ரி, சவுந்தர்யா மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News