வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்ல முயன்ற பள்ளி மாணவர்கள் மீட்பு

செய்யாறில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்ல முயன்ற 3 பள்ளி மாணவர்களை மீட்டு காவல்துறையில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்;

Update: 2021-09-26 07:24 GMT

சிறுவர்களை மீட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு காவல் துறையினர் பாராட்டு தெரவித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்ல முயன்ற 3 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

செய்யாறில் இருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தில் 13 வயது மதிக்கத்தக்க மாணவரும் அவருடன் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தனர். பெற்றோர் , பாதுகாவலர் இல்லாமல் பயணிக்க இந்த மூன்று பேர் குறித்து சந்தேகம் அடைந்த நடத்துனர் தங்கராஜ், ஓட்டுநர் முரளியிடம் தகவல் தெரிவித்து பயணச்சீட்டு வழங்குவது போல அவர்களை கண்காணித்தனர்.

பின்னர் செய்யாறு -  காஞ்சிபுரம் சாலையில் உள்ள தூசி காவல் நிலையம் வந்ததும் அந்த 3 மாணவர்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  பின்னர் 3 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோருக்கு தெரியாமல் சென்னை செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து மாணவர்களை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு மூன்று மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர் முரளி, நடத்துனர் தங்கராஜ் ஆகியோரை காவல் நிலையம் வரவழைத்து போலீசார் பாராட்டி கௌரவித்தனர்.

Tags:    

Similar News