செய்யாறு: மின்வாரிய அலுவலகம் எதிரே வாயில் முழக்க போராட்டம்
மின்வாரிய அலுவலகம் எதிரே வாயில் முழக்க போராட்டம்;
செய்யாறு மின்வாரிய அலுவலகம் எதிரே மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்யாறு கோட்டம் மின்வாரிய அலுவலகம் எதிரே மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டு பத்தாம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் முன்னிட்டு அதனை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்சார வாரியம் தனியார் மயமாக்குவதை எதிர்த்தும், விவசாயம், குடிசை, சிறு தொழில்களுக்கான இலவச மின்சாரம் ரத்து, மின்சார வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர்கள் பொறியாளர்கள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.