ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 ஆயிரம்

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Update: 2024-05-25 01:49 GMT

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை புதன்கிழமை எண்ணப்பட்டதில், ரூ.55,000 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், இரு நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.55,005-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்தீபன், செய்யாறு ஆய்வா் முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீஷ் , இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள்,   ஊா் மக்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.

ஸ்ரீரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ரூ.1,35,593-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடந்த 24.01.24 அன்று எண்ணப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நேற்று கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்தி இருந்த காணிக்கை எண்ணப்பட்டது.  

இதில், நிரந்தரமாக உள்ள நான்கு உண்டியல்கள் மூலம் ரூ.1,35,593-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா்கள் முத்துசாமி (கலசப்பாக்கம்) நடராஜன் (செய்யாறு), செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி,  இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஊா் மக்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.

Tags:    

Similar News