செய்யாறு அருகே சிறப்பு மனு நீதி நாள் முகாம்
செய்யாறு அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் , எம்எல்ஏ பங்கேற்றனர்;
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா திருப்பனங்காடு கிராமத்தில் பில்லாந்தாங்கல், வெம்பாக்கம், திருப்பனமூர், சேலேரி ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய பகுதிகளில் மனுநீதி நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது
முகாமுக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் அனாமிகா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் .ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு 501 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 2 ஆயிரத்து 344 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு வயதுடைய அதிகமான குழந்தைகளுக்கு வயதுக்கு உண்டான எடை இல்லை. வளர்ச்சி இல்லை.
இதற்கு காரணம் போதுமான ஊட்டச்சத்து இல்லாததுதான் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கு சத்துமாவு பாக்கெட் கொடுக்கின்றோம்.
குழந்தைகள் காலை உணவை தவிர்க்கக்கூடாது. அப்போதுதான் குழந்தை வளர்ந்து அந்த ஒரு வயது இரண்டு வயது ஆகும்போதே அந்த வளர்ச்சி போதுமான வளர்ச்சியாக வரும்.
தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு வழங்கி வளர்க்க வேண்டும். குழந்தைக்கு கல்வி தான் ரொம்ப முக்கியம். பெண் கல்வி முக்கியத்துவத்ைத உணர்ந்து தான் புதுமைப் பெண் திட்டம் என்ற ஒரு திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
பெண் குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கி வருகிறார். ஊக்கத்தொகை பெற்றுக் கொண்டு தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும்.என பேசினார்.
செய்யாறு எம் எல் ஏ ஜோதி பேசுகையில்,
தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக பல திட்டங்களை வழங்கி வருகிறார். பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு பெண்களுடைய வளர்ச்சிக்காக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரும்பாடு பட்டு வருகிறார் என கூறினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பெருமாள், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், வெம்பாக்கம் வட்ட வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் தமின், பழனி, மாவட்டக்கவுன்சிலர் தெய்வாணி, ஒன்றியக் கவுன்சிலர் ஞானவேல், உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.