திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்

திருவண்ணாமலையில் மாவட்ட எஸ்பி கார்த்தி கேயன் தலைமையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது;

Update: 2023-07-13 11:32 GMT

திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு விசாரணை முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் எஸ்.பி. கார்த்திகேயன்.

திருவண்ணாமலையில் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் காவல் துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகிறார்கள்.

இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று விசாரணை நடத்தினார்.

முகாமில் சைபர் கிரைம் பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் பழனி, தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். பின்னர் அதன் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தொடர் விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் அனுமதி இன்றி ஊர்வலம் சாலை மறியலில் ஈடுபட்ட 109 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக செய்யாறு நகராட்சி தூய்மை பணியாளர்கள்,  விவசாயிகள் என 109 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செய்யாறு பகுதியை சேர்ந்த 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு விவசாயம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு புறவழி சாலையில் அமைந்துள்ள சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க ஊர்வலமாக சென்றனர்.  அப்போது போலீசார் அனுமதி வழங்கிய சாலையில் செல்லாமல் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது,  இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் விவசாயிகள் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் முன் 69 நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஜூன் மாத ஊதியம் வழங்கவில்லை என கோரி போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் மதனராசன் நடித்த புகாரியின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்யாற்றில் யாதவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவுக்காக செய்யாறு பேருந்து நிலைய பகுதியில் இருந்து ஆரணி கூட்டு சாலை வரை யாதவர் கூட்டமைப்பினர் அரசு அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News