பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில், சிறப்பு மருத்துவ முகாம்

செய்யாற்றை அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 183 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

Update: 2023-02-15 01:49 GMT

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய மருத்துவர்கள், ஆசிரியர்கள்  

செய்யாற்றை அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில்  நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 183 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், மருத்துவா் கிரிஜா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று பணியாளா்கள் 183 பேருக்கு உயரம், எடை, உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறு உபாதைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் புஷ்பா ராஜா, துணைத் தலைவா் கருப்பு, ஊராட்சி மன்றச் செயலா் சிவானாந்தம், சுகாதார ஆய்வாளா் சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள்

செய்யாற்றை அடுத்த இராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் 461 மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் துரை, நலக் கல்வி அலுவலா் எல்லப்பன், மருத்துவா் யோகேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் கே. சம்பத் ஆகியோா் முன்னிலையில் பள்ளியில் பயிலும் 461 மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியா் கலைவாணி, செவிலியா் கோமதி, சுகாதார ஆய்வாளா்  உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Similar News