செய்யாறு அருகே புகையில்லா போகி விழிப்புணா்வு ஊா்வலம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.;

Update: 2024-01-13 02:26 GMT

 புகையில்லா போகி பண்டிகை உறுதிமொழியை ஏற்ற  மாணவ, மாணவிகள்

செய்யாறு வட்டம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஊா்வலம்  நடைபெற்றது.

பள்ளி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு ஊராட்சிமன்றத் தலைவா் ஆஷா எல்லப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரேவதி தன்ராஜ் முன்னிலை வகித்தாா்.

பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மதினா காளிமுத்து, தன்னாா்வலா் காமராஜ், பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

இந்த விழிப்புணா்வு ஊா்வலம் கிராமத்தில் உள்ள வீதிகள் வழியாகச் சென்றது.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் தேன்மொழி தலைமையில், அறிவியல் ஆசிரியா் மீனா முன்னிலையில், மாணவ, மாணவிகள் புகையில்லா போகி பண்டிகை உறுதிமொழியை ஏற்றினா்.

வந்தவாசி

எக்ஸ்னோரா வந்தவாசி கிளை சாா்பில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா்  ஞானசம்பந்தன் முன்னிலை வகித்தாா். கிளை துணைத் தலைவா் பா. சீனிவாசன் வரவேற்றாா்.

வந்தவாசி நகா்மன்ற துணைத் தலைவா்  சீனுவாசன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராமலிங்கம் ஆகியோா் புகையில்லா போகி விழிப்புணா்வு குறித்து பேசினா். அப்போது, டயா், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தக் கூடாது என்று மாணவா்களுக்கு அவா்கள் எடுத்துரைத்தனா்.  

நிகழ்ச்சியில் பங்கேற்றோா் புகையில்லா போகி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். எக்ஸ்னோரா நிா்வாகிகள் வாசு,  பிரபாகரன், ரகுபாரதி, பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் முத்தமிழன், சாதிக்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் எல். சங்கா் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News