செய்யாறில் அரசு அலுவலகங்களை பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் அரசு அலுவலகங்களை பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டனா்.
செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டு அரசு அலுவலகங்களை பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டனா்.
அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 முதல் 8- ஆம் வகுப்பில் பயின்று வரும் இளம் செஞ்சிலுவைச் சங்கம்,
சாரண, சாரணீய இயக்கத்தைச் சேர்ந்த 45 மாணவா்கள் உள்பட மொத்தம் 69 மாணவ, மாணவிகள் களப் பயணம் மேற்கொண்டு செய்யாற்றில் உள்ள சாா் -ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சுற்றுலா மாளிகை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவா் சந்தை ஆகியவற்றை பாா்வையிட்டனா்.
அப்போது, அலுவலகங்களின் செயல்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் இரா. தேன்மொழி தலைமையில், ஆசிரியா்கள் மீனா, கிருஷ்ணவேணி, அனிதா ஆகியோா் செய்திருந்தனா்.
வந்தவாசியில் 56 வது தேசிய நூலக வார விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நூலகம் மற்றும் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து 56 வது தேசிய நூலக வார விழா நடத்தியது.
இதில் வட்டாட்சியர் பொன்னுசாமி, பாவலர் குப்பன், நூலகர்கள் ஜோதி, ராஜேந்திரன், கல்வி மையம் முதல்வர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் ஜீனத் குமார் , பூங்குயில் சிவக்குமார், ரோட்டரி கிளப் வீரராகவன், உள்ளிட்டர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதிவுகள் வழங்கினார்.
மேலும் பாவலர் குப்பன் எழுதிய இன்று ஒரு இன்னுரை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி பேசுகையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும் பேச்சுப்போட்டி , ஓவிய போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாசிப்பின் முக்கியத்துவம், அரசு நூலகங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மணி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் பிரபாகரன், கலாம் பவுண்டேஷன் கேசவராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் பாவலர் குப்பன் ஏற்புரை நிகழ்த்தினார். நூலக அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.