செய்யாறு அருகே பள்ளியில் முப்பெரும் விழா
பெருங்காட்டூர் ஊர் புற நூலகத்தில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
செய்யாறு அருகே நூலகத்தில் தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்காட்டூர் ஊர் புற நூலகத்தில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
பல் தீரன் போட்டிகள் சட்ட விழிப்புணர்வு வாசிப்பை நேசிப்போம் என மூன்று நிகழ்வாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். நூலகர் தமீம் அனைவரையும் வரவேற்றார்.
பல்திறன் போட்டிகளில் மாணவர்கள் மாணவிகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். செய்யாறு இலவச சட்டப் பணி குழு உறுப்பினர் விஜயகுமார் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கருத்தை எடுத்துரைத்தார். சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வாசிப்பை நேசிப்போம் குறித்து நூலகர் தமீம் மாணவர்களிடையே வாசிப்பதனால் சிந்தனை திறன் அதிகரிக்கும் எனவும் வாசிப்பதினால் மாணவர்கள் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது குறித்தும் பேசினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள், எழுத்து பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நூலகத்திற்கு ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலராக இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நூலகத்தில் மழலையர் பள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை நேசிக்க வைக்க மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் நூலக அலுவலர்கள் , வட்டார கல்வி அதிகாரிகள் , ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.