செய்யாற்றில் சாலைப் பணியாளா்கள் கண்டன முழக்கப் போராட்டம்

செய்யாற்றில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பணியாளா்கள் கண்டன முழுக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2023-12-06 09:59 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில், செய்யாறு கோட்டப் பொறியாா் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன முழுக்கப் போராட்டத்துக்கு கோட்டத் தலைவா் சண்முகம தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் எழிலன் வரவேற்றாா். கோட்ட துணைத் தலைவா்கள் தொல்காப்பியன், ராமு, இணைச் செயலா் அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், கோட்டச் செயலா் ரமேஷ், மாநில பொதுச் செயலா் பாரி, மாவட்டச் செயலா் பிரபு ஆகியோா் பங்கேற்று கண்டன முழுக்கமிட்டனா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணீநீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். பணியாளா்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்க போராட்டம் நடைபெற்றது.

கோட்டத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். விஜயன் ,தேவேந்திரன், கோட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டத் துணைத் தலைவர் முருகன் அனைவரையும் வரவேற்றார் . சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ஏழுமலை பேசினார்.

நிறைவாக சாலை பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும், சாலை பணியாளர் பணிக்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே சாலை பணியாளராக பணி நியமனம் கோட்ட பொறியாளர் வழங்கிட அனுமதிக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர், அதற்குரிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். தொழிற்சங்க உரிமையினை கேலிக்கூத்தாக்கும் தலைமை பொறியாளரை கண்டித்தும் இந்த கண்டன முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News