ரத்த கொடையாளர்களுக்கு குளிர்பானம் ரொட்டி வழங்கிய ரிவர் சிட்டி லயன் சங்கம்

ரத்ததானம் செய்தவர்களுக்கு செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் வழங்கல்;

Update: 2022-02-06 06:39 GMT

செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கிக்கு ரத்ததானம் செய்ய வரும் நபர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில், குளிர்பானம் மற்றும்  பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது

செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் முன்னாள் செயலாளர் லயன் கி.கோபிராஜ் ஏற்பாட்டில் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கிக்கு, ரத்ததானம் செய்ய வரும் நபர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில், குளிர்பானம் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.பாண்டியன், சங்க செயலாளர் லயன் எம்.ராஜ்குமார் மாவட்ட தலைவர் லயன் ப.நடராஜன், உறுப்பினர்கள் லயன் கே.வெங்கடேசன், லயன் புருஷோத்தமன், லயன் க.பெருமாள் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றிருந்தனர். 

Tags:    

Similar News