செய்யாறில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
செய்யாற்றில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
செய்யாற்றில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முன்னிலை வகித்தார்.மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம், மண்டல துணைத் தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
ஓய்வு பெறும் நாளில் தொழிலாளர்களுக்கு அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும். 80 மாதத்திற்கான டி. ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மார்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.பணியின் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.