தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
செய்யாறு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்.;
செய்யாறு அடுத்த ராந்தத்தில் கூரை வீடு ஒன்று மின்கசிவால் தீப்பற்றி எரிந்து சேதமானது. செய்யாறு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தில் ஏகவல்லி ரகோத்தமன் என்பவரின் கூரை வீடு மின் கசிவு ஏற்பட்டு எரிந்து சேதமானது. தகவல் அறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி எரிந்து சேதமான வீட்டை பார்வையிட்டு ,வீட்டின் உரிமையாளர் ஏகவல்லி ரகோத்தமனுக்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள், தொகுப்பினை வழங்கி, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் ராஜி ஒன்றிய செயலாளர் தினகரன் , ஒன்றிய குழு உறுப்பினர் குணாநிதி, திமுக நிர்வாகிகள் ,ஊரா ட் சி துணைத் தலைவர் பிரபு, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நிவாரண உதவிகள்
திருவண்ணாமலையில் மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம் இந்திரா நகரில் பாக்கியம் பெருமாள் என்பது வீடு சேதம் அடைந்து இருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநில தலைவர் விஜய் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் ஆனந்தின் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஏற்பாட்டில் சேதமடைந்த வீடு சீரமைக்கப்பட்டது.
பின்னர் அந்த வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு, டேபிள் ஃபேன், மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு, நிதி உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினரும், தவெக மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான உதயகுமார், தவெக நிர்வாகிகள் சுதர்சன், மணிகண்டன், கார்த்திக், ராமராஜ், விஷ்வா, சரத், பிரசாந்த், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.