ஆற்று வெள்ளத்தில் இறங்கி மின்பாதை சீரமைப்பு

செய்யாறு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி மின் பாதையை சீரமைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு

Update: 2021-11-19 07:02 GMT

ஆற்று வெள்ளத்தில் மின்பாதையை சீரமைத்த மின்வாரிய ஊழியர்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி மின் பாதையை சீரமைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்யாறு அருகே உள்ள சிறுகாட்டூர் துணை மின் நிலையத்தில் இருந்து திருவத்திபுரம்,  மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் நிலையங்களுக்கு உயரழுத்த மும்முனை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மதுரை மின் நிலையத்துக்கு தண்டரை ,  இறையூர் கிராமங்கள் வழியாக செய்யாற்று பகுதியில் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தண்டரை அணைக்கட்டு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு செய்யாற்று வழியாக செல்வதால் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடியோடு சாய்ந்தன. தகவலறிந்த மின் வாரியத்தினர் விரைந்து சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

மின் ஊழியர்கள் மின் இணைப்பு பாதையை சரி செய்ய முயன்றபோது சுமார் ஐந்து அடி ஆழத்தில் செல்லும் வெள்ள நீரில் உயர் அழுத்த மின் கம்பிகளை எடுக்க முடியாமல் திணறினர். இதையடுத்து செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் உதவிக்கு அழைக்க பட்டனர். மேலும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயர் அழுத்த மின் பாதையை சரி பணியை பார்வையிட்டு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்கினார். 

உதவி மின் பொறியாளர் தெய்வசிகாமணி, , இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், திலீப் குமார், பெருமாள், ஆகியோர் மேற்பார்வையில் 30க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் டிராக்டர் , ஜேசிபி போன்ற இயந்திரங்கள் உதவியுடன் வெள்ள நீரில் இறங்கி புதிதாக மின் பாதை அமைத்து உயரழுத்த மின்சாரத்தை 25 கிராமங்களுக்கு வழங்கினர்.  மின் ஊழியர்கள் இந்த செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News