செய்யாறு சுகாதார மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 78,504 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்

Update: 2022-02-25 07:03 GMT

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 78,504 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து  புகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியா ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் 27ம் தேதியன்று நடைபெற உள்ளது.

சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர்,  வெம்பாக்கம், செய்யாறு,வந்தவாசி, தெள்ளாறு ஆகிய பகுதிகளில் 730 முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

வெளியூர்களில் இருந்து தற்காலிகமாக வந்தவர்கள், கட்டுமான பணிகளுக்காக வந்திருப்போர் மற்றும் நிரந்தர குடியிருப்பில்லாதவர்கள் ஆகியோரையும் கணக்கெடுத்து 40 இடங்களில் முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

மேலும் குழந்தைகள் விடுபடாமல் இருக்க 8 நடமாடும் வாகனங்கள் மூலம் சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. 1404 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 3052 நலத் துறை பணியாளர்கள், 473 பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் சொட்டு மருந்து கட்டும் பணியில் ஈடுபடுவர்.

91 மேற்பார்வையாளர்கள் பணியை கண்காணிக்க உள்ளனர். இந்த முகாம்கள் மூலம் சுமார் 78,504 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தவிர்க்கவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News