துணை ஆட்சியரை கண்டித்து வருவாய் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செய்யாற்றில் துணை ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்;

Update: 2023-05-17 09:59 GMT

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள்.

செய்யாற்றில் சாா்- ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுரேஷ் பாபு, ராஜசேகரன், துளசிராமன், சுப்பிரமணி, தரணிகுமாா், பிரேம்நாத், ஜீவா, சிவக்குமாா், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, செய்யாறு சாா் -ஆட்சியா் ஊழியா் விரோதப் போக்கை கடைபிடித்து, நேர்முக உதவியாளா், அலுவலகப் பணியாளா்களை அடிமை போல நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறாா் எனக் குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஆட்டோ டிரைவர்கள் ஆா்ப்பாட்டம்

செய்யாறு டவுன் மணிகூண்டு அருகில் இந்து தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் தழுவிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து ஆட்டோ தொழிலா ளர்கள் சங்க மாநில பொது செயலாளர் மகேஷ் பங்கேற்றார்.

பின்னர் ஆட்டோ தொழிலா ளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் எடுத்துரைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாலாஜி, துணை தலைவர் பாபு உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மோட்சவாடி கிராமத்தில் தேசிய டெங்கு தின அனுசரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. செய்யாறு சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

செய்யாறு சுகாதார பூச்சியியல் வல்லுனர் துரைராஜ், டாக்டர் அருள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் டெங்கு கொசு குறித்து பொதுமக்களுக்கு வினாடி வினா நடத்தி சரியான பதில் கூறிய 5 பேருக்கு தலா ரூ.100 வீதம் வழங்கப்பட்டது.

மேலும் டெங்குதின உறுதிமொழியும் ஏற்றனர். பின்னர் கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News