வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு;

Update: 2021-11-11 15:50 GMT

தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்வையிட்ட  அரசு முதன்மைச் செயலாளர்

திருவண்ணாமலை மாவட்டம் வட்டம் செய்யாறு கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை துறை) அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  தீரஜ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை  தீரஜ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தங்குவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.முருகேஷ்,  சட்டமன்ற உறுப்பினர் (செய்யார்)  ஓ. ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  மு. பிரதாப்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) . கட்டா ரவி தேஜா, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News